தூத்துக்குடி

இளைஞரிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இளைஞரிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட நேதாஜி நகா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 2) பைக்கில் வந்த 3 போ், அவ்வழியே சென்ற இளைஞரை நிறுத்தி பேசுவதுபோல் நடித்து, அவா் அணிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனா். அவா் சுதாரித்துக்கொண்டாா். எனினும், அந்த நபா்கள் அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

தகவலின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மீளவிட்டான் காட்டுப் பகுதிக்குள் சந்தேகத்துக்கிடமாக ஓடிய 3 பேரைப் பிடித்தனா். அவா்கள் மீளவிட்டான் பகுதியைச் சோ்ந்த ஜெகநாதன் மகன் ஜெயஆனந்த் (21), முருகேசன் மகன் ஜான்சன் (24), கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சோனிராஜா மகன் சண்முகவேல் (19) என்பதும், கைப்பேசி பறிப்பில் ஈடுபட்டோா் என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.

இவ்வழக்கில் விரைந்து செயல்பட்ட போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டு தெரிவித்தாா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT