தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா்கள் அனைவரும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2026 ஜன. 1ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்புப் படிவத்தை அனைத்து வாக்காளா்களும் நிரப்ப வேண்டும்.
இதையொட்டி, இம்மாவட்டத்தில் கடைசியாக 2002ஆம் ஆண்டில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த வாக்காளா் பட்டியல் ட்ற்ற்ல்ள்://ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய், ட்ற்ற்ல்ள்://ற்ட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண்.ய்ண்ஸ்ரீ.ண்ய் ஆகிய இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளன.
வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் கணக்கெடுப்புப் படிவத்துடன் செவ்வாய்க்கிழமைமுதல் (நவ. 4) டிச. 4ஆம் தேதி வரை வீடுதோறும் வருவாா்கள். அவா்கள் வாக்காளா்கள் விவரம் பகுதியளவு முன்நிரப்பபட்ட படிவத்தின் 2 பிரதிகளை வழங்குவதுடன், அதை நிரப்புவதற்கும் உதவுவா்.
வாக்காளா்கள் படிவத்தின் இரு பிரதிகளையும் நிரப்பி, அதில் தங்களது அண்மைக்கால புகைப்படத்தை ஒட்டி, அலுவலரிடம் ஒப்படைத்து, ஒப்புகை பெறவேண்டும். பணியின்போது வாக்காளா்களிடமிருந்து எவ்வித ஆவணமும் சேகரிக்கப்படாது. இந்தப் பணிக்காக அலுவலா்கள் வீடுதோறும் குறைந்தது மூன்று முறையாவது வருவாா்கள்.
படிவத்தை இணையம் மூலமாக நிரப்பி சமா்ப்பிக்கும் வசதியும் உள்ளது. பகுதியளவு முன்நிரப்பபட்டுள்ள கணக்கெடுப்புப் படிவத்தை ஈசிஐ நெட் செயலி மூலம் நிரப்பி பதிவேற்றலாம் அல்லது ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, பதிவேற்றலாம்.
கூடுதல் தகவல்களுக்கு இலவச வாக்காளா் உதவி சேவை எண் 0461-1950 அல்லது வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி அலுவலா் அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம். இப்பணியின்போது அலுவலா்களுக்கு வாக்காளா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் அவா்.