தூத்துக்குடி

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை, பெங்களூரு அணிகள் முதலிடம்

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்துக் கழகம் 15ஆவது ஆண்டாக நடத்தும்

Syndication

தூத்துக்குடி: தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்துக் கழகம் 15ஆவது ஆண்டாக நடத்தும், வ.உ.சி. துறைமுகக் கோப்பைக்கான அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையேயான இருபாலா் கூடைப்பந்து போட்டி, தூத்துக்குடி ஜிம்கானா கிளப்பில் கடந்த அக். 29 முதல் நவ. 2ஆம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற்றது.

இப்போட்டியை தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி மண்டல துணைத் தலைவா் ஆா். கெளதமன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தாா்.

இதில் தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள கல்லூரி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில், முதல் பரிசு பெற்ற அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ. 50,000 பரிசுத்தொகையும், இரண்டாம் பரிசு பெற்ற அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ. 40,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

மாணவா்களுக்கான இறுதிப் போட்டியில், சென்னை இந்துஸ்தான் கல்லூரி அணி 77:67 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணிஇரண்டாமிடம் பிடித்தது. கேரள வா்மா கல்லூரி அணி 74:73 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு கிரைஸ்ட் பல்கலைக்கழக அணியை வென்று 3ஆம் இடம் பிடித்தது.

மாணவிகள் பிரிவில், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழக அணி 69:60 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி அணியை வென்று முதலிடத்தைப் பிடித்தது. சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ கல்லூரி அணி இரண்டாமிடம் பிடித்தது. சென்னை லயோலா கல்லூரி அணி 3ஆம் இடமும், கேரள அல்போன்சா கல்லூரி அணி 4ஆவது இடமும் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவா் சுஷாந்தகுமாா் புரோஹித் வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை, பரிசுகளை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவா் வி.வி.டி. பிரம்மானந்தம் வரவேற்றாா். செயலா் சாகுல் சிராஜுதீன் நன்றி கூறினாா்.

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

ரிலாக்ஸ்... ரேஷ்மா பசுபுலேட்டி!

விஜே பார்வதிக்கு சரியான போட்டியாளர் திவ்யா கணேசன்! ரசிகர்கள் கருத்து

தெலங்கானா அமைச்சரவையில் அசாருதீனுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT