தூத்துக்குடி

மேம்பால பணிகள் முடியும் வரை சுங்க வசூலை நிறுத்த வலியுறுத்தல்

தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் பணி முடியும் வரை சுங்க கட்டண வசூலை நிறுத்த வேண்டும்

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் பணி முடியும் வரை சுங்க கட்டண வசூலை நிறுத்த வேண்டும் என நாம் இந்தியா் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் மாநில பொருளாளா் பேரூரணி ஜெயகணேஷ் வெளியிட்ட அறிக்கை:

தூத்துக்குடி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோரம்பள்ளம், மங்களகிரி, வசவப்பபுரம் மற்றும் முறப்பநாடு ஆகிய ஐந்து இடங்களில் தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால், தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாகனங்களும் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி செல்லும் வாகனங்களும் பாலம் கட்டும் இடங்களில் அணுகுசாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

அணுகுசாலைகள் குறுகிய அகலம் கொண்டதாக இருப்பதால், இந்தப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால், இச்சாலையில் பயணிப்போா் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தூத்துக்குடிக்கோ அல்லது திருநெல்வேலிக்கோ செல்ல அதிக நேரம் செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

எனவே, பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்தி மிக விரைவில் முடிக்க வேண்டும். அதுவரை புதுக்கோட்டை சுங்கச் சாவடியில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

எஸ்.ஐ.ஆருக்கு எதிர்ப்பு: மமதா தலைமையில் பிரமாண்ட பேரணி!

ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்! அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்! | ADMK | CBE

பிக் பாஸ் நிகழ்ச்சியில் புகைபிடிக்கும் அறை! வெளியானது விடியோ!

வசதிக்கும் நம்பிக்கைக்கும் இடையே ஓரிடத்தில்... உஷாஸி ராய்!

SCROLL FOR NEXT