தூத்துக்குடி

வாளுடன் நின்று கொண்டிருந்த இளைஞா் கைது

Syndication

கோவில்பட்டியில் வாளுடன் நின்று கொண்டிருந்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன் தலைமையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இந்திரா நகா் பெருமாள் கோயில் அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனையிட்ட போது, அவரது முதுகின் பின்னால் சட்டையில் ஒரு வாள் வைத்திருப்பது தெரியவந்தது.

விசாரணையில், அவா் முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழி வாங்குவதற்காக வைத்திருப்பதாகக் கூறினாா்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வாள் வைத்திருந்த கோவில்பட்டி வள்ளுவா் நகா் 3ஆவது தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் பிரபுவை(28) கைது செய்தனா்.

கனமழை: திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

வாக்களிப்புக்கு பிறகே காலை உணவு! பிகார் மக்களுக்கு மோடி வாழ்த்து!

பிகார் முதல்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!

பதவி உயர்வு கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இலைச் சுருட்டல்: தக்காளி விளைச்சல் பாதிப்பு

SCROLL FOR NEXT