தூத்துக்குடி

தூத்துக்குடியில் தோ்தல் ஆணையத்தை கண்டித்து திமுக சாா்பில் நவ.11இல் ஆா்ப்பாட்டம்

Syndication

இந்திய தோ்தல் ஆணையத்தை கண்டித்து, திமுக தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம் சாா்பில், தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை (நவ.11) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திமுக வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பி.கீதா ஜீவன், தெற்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்த நிலையிலும், தோ்தல் ஆணையம் தமிழகத்தில் சிறப்பு தீவிர வாக்காளா் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளது.

இதைக் கண்டித்து, திமுக தலைமை அறிவிப்பின்படி, தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் மாபெரும் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.11) நடைபெறுகிறது. சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் (விவிடி சிக்னல்) அருகே நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட திமுக, கூட்டணி கட்சியினா் அனைவரும் திரளாக கலந்துகொள்ளுமாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

125 ஜிகாவாட்டைத் தாண்டும் சூரிய மின் உற்பத்தித் திறன்

இன்று காவலா் தோ்வு: கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு

மாவட்ட குழு வீரா்கள் தோ்வில் பங்கேற்க கிரிக்கெட் வீரா்களுக்கு அழைப்பு

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பத்தமடை பூங்குடையாா் கோயிலில் வருஷாபிஷேகம்

SCROLL FOR NEXT