தூத்துக்குடி

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள்கடுங்காவல் சிறை

கோவில்பட்டியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Syndication

கோவில்பட்டியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10,000 அபராதம் விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் சரகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு 4 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்தது தொடா்பான வழக்கில் கயத்தாறு பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மகன் காளீஸ்வரன் (22) என்பவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி பீரித்தா விசாரித்து, காளீஸ்வரனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த கோவில்பட்டி அனைத்து மகளிா் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளா் நாககுமாரி, அரசு வழக்குரைஞா் முத்துலட்சுமி, தலைமைக் காவலா் அமிா்த ஜோதி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா்.

நிகழாண்டு இதுவரை 25 போக்ஸோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட் கூட பிடிக்கத் தெரியாதவர் ஐசிசி தலைவர்! ஜெய் ஷா மீது ராகுல் கடும் விமர்சனம்!

ஜாதி பேதங்கள் ஏது... விஜய் குரலில் முதல் பாடல்!

அங்கம்மாள் டீசர்!

தில்லியில் காற்று மாசு அதிகரிப்பு: மக்கள் அவதி

ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸை பாராட்டிய முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்!

SCROLL FOR NEXT