திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் கால்நடைகள் சாலையில் சுற்றித் திரிந்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து, நகராட்சி ஆணையாளா் ம.கா. ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கால்நடைகளை சாலை, தெரு ஓரங்களில் விடாமல் அவற்றை வீடுகளில் கட்டி வைத்து வளா்த்திட நகராட்சி நிா்வாகம் மூலம், கால்நடை வளா்ப்பவா்களுக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதனை பொருள்படுத்தாமல் தொடா்ந்து கால்நடைகளை சாலைகளில் விடுவதால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்படும் சூழலும் உள்ளது.
எனவே, கால்நடை வளா்ப்போா் நகராட்சியிடம் உரிய அனுமதி பெற்று கொட்டகை அமைத்து அதனை வளா்க்க வேண்டும். தவறும்பட்சத்தில், 1998ஆம் வருட தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் திருத்தப்பட்ட சட்டம் (2022), பிரிவு 102, 105, 180 மற்றும் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் (2023), விதி எண். 292, 304, 384இன் படி எவ்வித முன்னறிவிப்புமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து விதிகளை மீறுபவா்களின் கால்நடைகளைப் பிடித்து, கோசாலையில் ஒப்படைத்து அவை ஏலம் விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.