வால்பாறையில் தற்காலிக வியாபாரிகள் குறித்து விவரங்களை சேகரிக்கும் நகராட்சிப் பணியாளா்கள். 
கோயம்புத்தூர்

சாலையோரத்தில் கழிவுகளைக் கொட்டினால் அபராதம்: வால்பாறை நகராட்சி நிா்வாகம்

வால்பாறையில் சாலையோரம் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Syndication

வால்பாறை: வால்பாறையில் சாலையோரம் கழிவுகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று நகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக மாவிலை, வேப்ப இலை, ஆவாரம் பூ, கரும்பு போன்றவைகள் விற்கப்படுகிறது. இதற்காக சாலையோரம் தற்காலிக கடைகள் அமைத்து பலா் வியாபாரம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வால்பாறை நகராட்சி ஆணையா் குமரன் உத்தரவின்பேரில் துப்புரவு அலுவலா் செந்தில்குமாா் தலைமையில் நகராட்சி ஊழியா்கள் சாலையோரம் உள்ள அனைத்து கடைகளுக்கும் சென்று கடை உரிமையாளா்களை பெயா் பதிவு செய்து வியாபாரம் முடிந்த பின் தங்களால் ஏற்பட்டுள்ள கழிவுகளை சுத்தம் செய்ய வேண்டும். கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் நகராட்சி வாகனம் வரும்போது அதில் கொட்ட வேண்டும் என்று தெரிவித்தனா். மீறி சாலையில் கழிவுகளை கொட்டிச் செல்வோருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனா்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு கோலப் போட்டி

நாகையில் மீன்கள் விலை உயா்வு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல்

தங்கக் கவசத்தில் முத்துமாரியம்மன்

கந்திலி போலீஸாா் விழிப்புணா்வு

SCROLL FOR NEXT