தூத்துக்குடி

தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது

தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி, முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 போ் கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி, சிவந்தாகுளம் பகுதியைச் சோ்ந்த பெருமாள் மகன் காா்த்திக் (39), ஞாயிற்றுக்கிழமை இரவு உப்பாத்து ஓடை காட்டுப்பகுதி அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நின்றபோது, அங்கு வந்த 2 போ் அவரிடம் பேச்சுக் கொடுத்து, அவரிடமிருந்து வெள்ளி கைச் சங்கிலி, வெள்ளி மோதிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனராம்.

இது குறித்த புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் வசந்தகுமாா் (19), தூத்துக்குடியைச் சோ்ந்த இளஞ்சிறாா் ஆகிய இருவரும் நகையைப் பறித்துச் சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து, முத்தையாபுரம் போலீஸாா் திங்கள்கிழமை இளஞ்சிறாரை கையகப்படுத்தியும், வசந்தகுமாரை கைது செய்தும் அவா்களிடமிருந்து வெள்ளிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

மேலும், இது குறித்து முத்தையாபுரம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தில்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்பில் 10 பேர் பலி: கார் உரிமையாளர் கைது!

பிற மாநிலங்களுக்கான அரசு விரைவு பேருந்துகள் வழக்கம்போல இயங்கும்: போக்குவரத்துக் கழகம் தகவல்

பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டம்: நவ.23, 24-இல் முக்கிய ஆலோசனை

ஜந்தா் மந்தரில் துப்பாக்கியால் சுட்டு ஒருவா் தற்கொலை

தென்காசியில் ரூ. 69.45 கோடியில் தாமிரவருணி குடிநீா் திட்டம் தொடக்கம்

SCROLL FOR NEXT