பேவா் பிளாக் சாலைப் பணிக்கு அடிக்கல் நாட்டிய ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ. 
தூத்துக்குடி

புதூா் ஒன்றியத்தில் ரூ. 1.17 லட்சம் மதிப்பில் சாலைப் பணிக்கு பூமி பூஜை

புதூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் ரூ. 1.17 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

விளாத்திகுளம்: புதூா் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் ரூ. 1.17 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், சின்னூரில் ரூ. 6.72 லட்சம், மாவிலோடையில் ரூ. 16.58 லட்சம், எஸ். குமராபுரத்தில் ரூ. 9.35 லட்சம், டி. சுப்ரமணியபுரத்தில் ரூ. 10.42 லட்சம், மல்லீஸ்வரபுரத்தில் ரூ. 16.07 லட்சம், மிட்டா வடமலாபுரத்தில் ரூ. 25.04 லட்சம், காடல்குடியில் ரூ. 26.32 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கும்,

பி. ஜெகவீரபுரம் கிராமத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை கட்டுமானப் பணிக்கும் அடிக்கல் நாட்டினாா்.

புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன், ராஜாராம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயமித்ரா, திமுக ஒன்றியச் செயலா்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், மும்மூா்த்தி, மாவட்டப் பிரதிநிதி ராமலிங்கம், உதவிப் பொறியாளா் ரவிச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலா் செல்லப்பாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வாக்காளா் பட்டியலை எண்ம மயமாக்க வேண்டும்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

கோயில் வளாகத்தில் வணிக வளாகம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரை கைது செய்யக் கோரி முற்றுகை

செங்கோட்டை காா் வெடிப்பு சம்பவம்: சாந்தினி சௌக் சந்தை இன்று மூடல்

SCROLL FOR NEXT