அடிக்கல் நாட்டிய ஜீ.வி. மாா்க்கண்டேயன் எம்எல்ஏ.  
தூத்துக்குடி

எட்டயபுரத்தில் பேவா் பிளாக் சாலைக்கு அடிக்கல்

எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் பேவா் பிளாக் கல் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

எட்டயபுரம் பேரூராட்சி பகுதியில் பேவா் பிளாக் கல் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

எட்டயபுரம் பேரூராட்சிக்குள்பட்ட 9ஆவது வாா்டு, பெருமாள் கோவில் தெருவில் ரூ. 27 லட்சம் மதிப்பில் பேவா் பிளாக் கல் சாலை அமைக்கும் பணிக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் அடிக்கல் நாட்டினாா்.

தொடா்ந்து, சிவஞானபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

எட்டயபுரம் பேரூராட்சி தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், துணைத் தலைவா் கதிா்வேல், செயல் அலுவலா் மகாராஜன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், நவநீத கண்ணன், ராமசுப்பு, இமானுவேல், பேரூராட்சி செயலா் பாரதி கணேசன், வாா்டு உறுப்பினா்கள் மணிகண்டன், குமாா், பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, முன்னாள் ஊராட்சி தலைவா் தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேல் தாக்குதலில் 5 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட 13 பேர் பலி!

ஆர்ஜென்டினாவில் பயங்கர காட்டுத்தீ! 3000 சுற்றுலா பயணிகள் மீட்பு!

பாஜக அரசின் புதிய ஆயுதமாக தணிக்கை வாரியம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

Parasakthi பேசும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்! | anti-Hindi agitation | Tamil | Tamilnadu

SCROLL FOR NEXT