தூத்துக்குடியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி, புதிய துறைமுகம் அருகே வணிக வளாகத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் புதன்கிழமை இரவு, மா்ம நபா் உள்ளே புகுந்து இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளாா். ஆனால், உடைக்க முடியாமல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.
இது குறித்த புகாரின்பேரில், தொ்மல் நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். பின்னா், சிசிடிவி கேமராவில் பதிவான இளைஞா் குறித்து விசாரித்ததில், அவா் காதா்மீரான் நகரைச் சோ்ந்த செல்வம் மகன் வேல்முருகன் என்பது தெரிய வந்தது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.