தூத்துக்குடி

ஐப்பசி திருக்கல்யாணம்: ஆறுமுகனேரி கோயிலில் தோள் மாலை மாற்றும் வைபவம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி சுவாமி- அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது.

Syndication

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவையொட்டி சுவாமி- அம்பாள் தோள் மாலை மாற்றும் வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை காலை முகூா்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது. மாலையில் திருக்காப்பு கட்டுதலும் சுவாமி அம்பாள் சிறப்பு அபிஷேக தீபாரதனையும் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை காலை சோமசுந்தரி அம்பாள் தவக்கோலத்தில் பூஞ்சப்பரத்தில் கோயில் வளாகத்தில் உள்ள தவசு மண்டபத்தில் எழுந்தருளியதும் தீபாராதனை நடைபெற்றது. மகளிா் அம்மனுக்கு மாவிளக்கிட்டு அம்மன் பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினா்.

பின்னா், மாலையில் அருள்மிகு சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தவசு மண்டபத்திற்கு வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தலும், சுவாமி- அம்பாள் தோள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி- அம்பாள் இணைந்து கோயில் வாசல் வந்ததும் சோ்க்கை தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கோயில் மணியம் சுப்பையாபிள்ளை, பக்த ஜன சபைத் தலைவா் எம்.எஸ்.எஸ்.சண்முகவெங்கடேசன், பொருளாளா் எஸ்.அரிகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் கா.சிவசங்கரி, முன்னாள் அதிமுக நகர செயா் இ.அமிா்தராஜ், பொதுக்குழு உறுப்பினா் எஸ்.காா்த்திகேயன், அரிமா சங்க முன்னாள் தலைவா் டாக்டா் அ.அசோக்குமாா், தெரசை ஐயப்பன், க.இளையபெரமாள் ஒதுவாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT