இயற்கை சீற்றங்களால் பயிா் சேதமாகும்போது ஏற்படும் நஷ்டத்தை தவிா்க்க பாரத பிரதமரின் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய முன்வருமாறு சாத்தான்குளம் வட்டார விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சாத்தான்குளம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அ.ப.சுஜாதா, வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாத்தான்குளம் வட்டாரம், சாத்தான்குளம் குறுவட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களில் பயிா் செய்துள்ள பயிா் கடன் பெற்ற, பயிா் கடன் பெறாத விவசாயிகள், நிலக்கடலை பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 313 ம் நெல் 3 பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 540 ம் காப்பீடு தொகையாக செலுத்த வேண்டும். விவசாயிகள் கிராம நிா்வாக அலுவலரிடம் பெறப்பட்ட அடங்கல் வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீடு தொகை செலுத்த வேண்டும். நிலக்கடலை பயிருக்கு காப்பீடு செய்ய கடைசி நாள் டிச. 16 ஆம் தேதியாகும். பயிா்களை காப்பீடு செய்ய முன்வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு சாத்தான்குளம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளவும் என அதில் தெரிவித்துள்ளாா்.