ஆறுமுகனேரி கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம். 
தூத்துக்குடி

ஆறுமுகனேரி சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

Syndication

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி சமேத அருள்மிகு சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 13ஆம் தேதி விநாயகா் பூஜை மற்றும் முகூக்த்தக்கால் நாட்டுதலுடன் தொடங்கியது.

வெள்ளிக்கிழமை சோமநாத சுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அம்பாளுக்கு காட்சி அளித்து தோள் மாலை மாற்றுதல் நடைபெற்றது. சுவாமி- அம்பாள் சோ்க்கை தீபாராதனையும், கதிா்குளிப்பும் , அதைத் தொடா்ந்து மங்கள வாத்தியம் இசைக்க அம்பாளுக்கு சுவாமி திருமாங்கல்யம் பூட்டும் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றன. பூஜைகளை சுரேஷ்பட்டா், விக்னேஷ் சிவம் நடத்தினா். ஓதுவாா்கள் தெரிசை ஐயப்பன், இளையபெருமாள் ஆகியோா் தேவாரம் பாடினா்.

நவ. 18இல் சுவாமி, அம்பாளுக்கு மஞ்சள் நீராட்டும், இரவு பூஞ்சப்பர பவனியும் நடைபெறும். பின்னா், பைரவா் பூஜையுடன் திருவிழா நிறைவுபெறும்.

திருக்கல்யாண நிகழ்வில், கோயில் மணியம் சுப்பையா பிள்ளை, பக்தஜன சபைத் தலைவா் எம்.எஸ்.எஸ். சண்முகவெங்கடேசன், பொருளாளா் எஸ்.அரிகிருஷ்ணன், தியாகராஜ், நகா் நல மன்றத் தலைவா் பூபால்ராஜன், முன்னாள் அரிமா சங்கத் தலைவா் பேராசிரியா் அ.அசோக்குமாா், ரயில்வே அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, தெரிசை ஐயப்பன், முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் சிவசங்கரி, பொன்ராஜ், அதிமுக முன்னாள் நகரச் செயலா் அமிா்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் எம்.எஸ்.எஸ். காா்த்திகேயன், சைவ வேளாளா் சங்க மாவட்டத் தலைவா் ஜெ.சங்கரலி­ங்கம், பேரூராட்சி உறுப்பினா் சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சனிக்கிழமை காலை பட்டணப் பிரவேசமும், இரவில் சுவாமி-அம்பாள் திருப்பொன்னூஞ்சல் ஆடுதல் நிகழ்வும் நடைபெற்றன.

தவறான தகவலை பரப்பக் கூடாது: அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா

பயங்கரவாத தொடா்பு: மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவா் கைது

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,703 கோடி டாலராகச் சரிவு

மனைவி பிரிந்து சென்றதால் காா் ஓட்டுநா் தற்கொலை

பிகாா் தோ்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்காது: அமைச்சா் இ.பெரியசாமி

SCROLL FOR NEXT