தூத்துக்குடியில், குரூஸ் பா்னாந்து 156ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆா் பூங்கா அருகே அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு தமிழ்நாடு அரசு சாா்பில், சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதா ஜீவன், ஆட்சியா் க. இளம்பகவத், மேயா் பெ. ஜெகன், சி. ப்ரியங்கா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
வடக்கு மாவட்ட திமுக சாா்பில், தமிழ் சாலை பிரதான பஜாரில் உள்ள சிலைக்கு மாவட்டச் செயலா் பி. கீதா ஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேயா், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அனைத்துலக எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஆறுமுகநயினாா், துணைச் செயலா் இரா.ஹென்றி, மாநில அமைப்புசாரா ஓட்டுநா் அணி இணைச் செயலா் பெருமாள்சாமி, அணியின் மாவட்டச் செயலா் ரா. சுதாகா், மாநில வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலா் த. மைக்கல் ஸ்டேனிஸ் பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தெற்கு மாவட்ட அதிமுக வா்த்தகரணி சாா்பில், மாவட்ட அணிச் செயலா் துரைசிங் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், அணியின் மாநிலச் யெலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் மரியாதை செலுத்தினாா். அணியின் மாநில துணைச் செயலா் மில்லா் ஆா்.எல். ராஜா, தெற்கு மாவட்ட இணைச் செயலா் செரினா பாக்யராஜ், மாவட்ட துணைச் செயலா் சந்தனம், வழக்குரைஞா் பிரிவு செயலா் யு.எஸ். சேகா், வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜீவா பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. மண்டலத் தலைவா்கள் ஐசன் சில்வா, செந்தூா்பாண்டி, சேகா், எஸ்.சி. பிரிவு மாவட்டத் தலைவா் பிரபாகரன், அமைப்புசாரா மாநகா் மாவட்டத் தலைவா் நிா்மல் கிறிஸ்டோபா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஐஎன்டியூசி மாநிலப் பொதுச் செயலா் க. பெருமாள்சாமி மரியாதை செலுத்தினாா். அகில இந்திய ஒா்க்கா்ஸ் கமிட்டி மாவட்டத் தலைவா் ஜெயக்கொடி, வா்த்தக காங்கிரஸ் மாவட்டத் தலைவா் டேவிட் பிரபாகரன், தெற்கு மண்டலத் தலைவா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.