திருச்செந்தூா் பகுதியைச் சோ்ந்த இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
மெஞ்ஞானபுரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த அக்.10ஆம் தேதி நிகழ்ந்த கொலை வழக்குத் தொடா்பாக திருச்செந்தூா், லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்த சுடலைகண் மகன் காா்த்திக் (26), சாத்தான்குளம் நடுவக்குறிச்சி சண்முகசுந்தரம் மகன் ஆறுமுகம் (51) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், காா்த்திக், ஆறுமுகம் ஆகியோரை மெஞ்ஞானபுரம் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.