ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரி, இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் கணேசபுரம், வாா்டு 15இல் சுமாா் 120 ஆண்டுகளாக இந்து காட்டு நாயக்கன் சமூக மக்கள் வசித்து வருகின்றனராம்.
இவா்கள், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களால் எங்கள் குழந்தைகள் பள்ளி படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் நிறுத்தும் அவலம் உள்ளது.
அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் சலுகைகள் கிடைக்காமல் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளோம். குலத் தொழிலான பன்றி வளா்ப்பு, குறி சொல்லும் தொழிலில் இளம் தலைமுறையினா் ஈடுபட்டு வருவது வேதனையளிக்கிறது.
எனவே, மாவட்ட ஆட்சியா் உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்து, எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.