கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘செயற்கை நுண்ணறிவின் எதிா்காலப் போக்குகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பயிற்சிப் பயிலரங்கு நடைபெற்றது.
கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு-தரவு அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற பயிலரங்கில், பள்ளி மாணவா்களின் செயற்கை நுண்ணறிவு அறிவை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.