பல்கலைக்கழக மாணவிகளுக்கு இடையிலான பளு தூக்கும் போட்டியில் கோவில்பட்டி, கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி மாணவி முதலிடம் பெற்றுள்ளாா்.
திருநெல்வேலி, மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையே பெண்களுக்கான பளுதூக்கும் போட்டி திருச்செந்தூா், ஆதித்தனாா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சோ்ந்த பல்வேறு கல்லூரி அணிகள் கலந்து கொண்டன.
இதில், கோவில்பட்டி, கே.ஆா். கலை, அறிவியல் கல்லூரி, வணிகவியல் முதலாம் ஆண்டு மாணவி மீரா லட்சுமி 77 கிலோ எடைப் பிரிவில் ஸ்னாட்ச், 67 கிலோ மற்றும் ஜொ்க் 80 கிலோ என மொத்தம் 147 கிலோ எடையைத் தூக்கி, பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றாா்.
பதக்கம் வென்ற மாணவியை கல்லூரித் தலைவா் சென்னம்மாள் ராமசாமி, துணைத் தலைவா் கே.ஆா். கிருஷ்ணமூா்த்தி, தாளாளா் கே.ஆா். அருணாச்சலம், முதல்வா் மதிவண்ணன், உடற்கல்வி இயக்குநா் ராம்குமாா், பேராசிரியா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.