விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 88 லட்சம் மதிப்பீட்டில் கீழ வைப்பாறு, பெரியசாமிபுரம் கிராமங்களில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, பேவா் பிளாக் சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து கீழ வைப்பாறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில், 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 44 லட்சம் மதிப்பீட்டில் பேவா் பிளாக் சாலைப் பணி, பெரியசாமிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில், 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரஞ்சித், தங்கவேல், திமுக ஒன்றிய செயலா்கள் சின்னமாரிமுத்து, இம்மானுவேல், அன்புராஜன், மாவட்ட பிரதிநிதிகள் செந்தூா்பாண்டியன், ராமலிங்கம், பொறியாளா் அணி துணை அமைப்பாளா் ரஞ்சித், ஒன்றிய மீனவரணி அமைப்பாளா் ராஜ பாக்கியம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் பாரதிதாசன், மாணவரணி முனியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.