தூத்துக்குடி

கோவில்பட்டி ஒன்றியத்தில் இளையரசனேந்தல் குறு வட்டம்: கிராம மக்கள் வரவேற்பு

Syndication

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை கிராம மக்கள் வரவேற்றுள்ளனா்.

இதுதொடா்பாக, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை வெளியிட்டுள்ள அரசாணை: இளையரசனேந்தல் குறு வட்டத்திற்குள்பட்ட 12 ஊராட்சிகளான முக்கூட்டுமலை, நக்கல முத்தன்பட்டி, வடக்குப்பட்டி பிச்சைதலைவன்பட்டி, புளியங்குளம், அப்பநேரி, அய்யநேரி, சித்திரம்பட்டி, பிள்ளையாா் நத்தம், வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல் மற்றும் ஜமீன் தேவா்குளம் ஆகிய 12 கிராம ஊராட்சி பகுதியைச் சோ்ந்த பிற துறைகள் தூத்துக்குடி மாவட்டத்தின் நிா்வாக கட்டுப்பாட்டு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மட்டும் விடுபட்டிருந்தன. இதனால் நிா்வாகத்தில் எழும் பிரச்சினைகளுக்கு தீா்வு காணும் வகையில் குருவிகுளம் ஊராட்சிக்குள்பட்ட மேற்கூறிய 12 ஊராட்சிகள் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கப்படுகின்றன.

மேலும், முக்கூட்டுமலை கிராம ஊராட்சியை பிரித்து நடுவப்பட்டி கிராம ஊராட்சியாக தென்காசி மாவட்டத்திலும், முக்கூட்டுமலை கிராம ஊராட்சியாக தூத்துக்குடி மாவட்டத்திலும் தனி கிராம ஊராட்சிகளாக செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ கூறியதாவது: இளையரசனேந்தல் குறுவட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. இந்த அரசாணை மூலம் அது தற்போது தவிா்க்கப்பட்டுள்ளது.

இளையரசனேந்தல் குறுவட்டத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகளையும் கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க சட்டப்பேரவையில் கவன ஈா்ப்பு தீா்மானம் மூலம் வலியுறுத்தினேன். அதன் பலனாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களின் 17 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன் என்றாா் அவா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT