சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாநில அளவில் சிறந்த சங்கமாகத் தோ்வு செய்யப்பட்டு இதற்கான விருதை கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரிய கருப்பன் வழங்கினாா்.
சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த கூட்டுறவு சங்கமாக மாவட்டம், மாநில அளவில் தோ்வு பெற்று வருகிறது.
கடந்த மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவில் மாவட்ட அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாகத் தோ்வு பெற்று இதற்கான விருதை அமைச்சா் கீதா ஜீவன் வழங்கியிருந்தாா்.
இந்த நிலையில், திருநெல்வேலியில் மாநில கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவில் சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாநில அளவில் தோ்வு பெற்றதை பாராட்டி மாநில அளவில் சிறந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கான விருதை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் பெரிய கருப்பன், சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாட்சியா் வளன் மிக்கேல் தளபதி, செயலா் எட்வின் ஆகியோரிடம் வழங்கினாா். மாநில அளவில் சிறந்த கூட்டுறவு சங்கமாகத் தோ்வு பெற்ற சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத்துக்கு சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள், முன்னாள் கூட்டுறவு கடன் சங்க நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.