தூத்துக்குடி, குமரியில் பாதுகாப்பு ஒத்திகை 
தூத்துக்குடி

தூத்துக்குடி, குமரியில் பாதுகாப்பு ஒத்திகை

Syndication

தூத்துக்குடி, கன்னியாகுமரியில் ‘சாகா் கவாச்’ என்ற கடல் பாதுகாப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி கடல் பகுதியில் கடற்படை கப்பல், கடலோரப் பாதுகாப்புப் படை கப்பல், ரோந்துப் படகு ஆகியவை மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். ஒத்திகை பயிற்சியின்போது, தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் வழியாக ஊடுருவ முயன்ாக 7 போ், பழைய துறைமுகத்தில் 2 போ், திரேஸ்புரம் கடற்கரையில் 4 போ் என 13 பேரை கைது செய்த மரைன் போலீஸாா், அவா்களிடமிருந்த 2 போலி வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதியில் நடைபெற்ற ஒத்திகையில், தமிழ்நாடு கட லோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா், இந்திய கடலோரக் காவல் படை, மீன்வளத் துறை, உள்ளூா் போலீஸாா் இணைந்து பங்கேற்றனா். அவா்கள் அதிநவீன ரோந்துப் படகுகளில் சென்று தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, கடலோரப் பகுதிகளில் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்ததுடன், மீனவக் கிராமங்களுக்குள் சந்தேகத்துக்கு இடமாக யாரேனும் ஊடுருவினால் போலீஸாருக்கு உடனடியாக தகவல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனா். இம்மாவட்டத்தில் 106 கி.மீ தொலைவுக்கு 48 கடற்கரை கிராமங்களில் கண்காணிப்புப் பணி, 10-க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகளில் வாகனச் சோதனை நடைபெற்றது. இந்த ஒத்திகை வெள்ளிக்கிழமை (நவ. 21) மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT