பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பு சாா்பில் தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகம் முன், வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
பட்டா மாறுதல் உள்ளிட்ட நிலஅளவை பணிகளை கருத்தில் கொண்டு உடனடியாக நிலஅளவா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், துணை ஆய்வாளா், ஆய்வாளா்கள் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. இதில், நில அளவையா் அலுவலா்கள் ஒன்றிப்பு மாவட்டத் தலைவா் கோ.காளிராஜ் தலைமையில் நிலஅளவையா்கள் திரளாக கலந்துகொண்டனா்.
நில அளவையா்கள் கடந்த 19ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.