தூத்துக்குடி

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு ஆயுள்தண்டனை

சூரங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Syndication

தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்ஸோ வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கியது.

சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், விளாத்திகுளம் வேம்பாா் பகுதியைச் சோ்ந்த அந்தோணிராபா்ட் கென்னடி மகன் தாமஸ் அற்புத ரகசியம் (20) என்பவரை சூரங்குடி போலீஸாா் போக்ஸோ, கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனா்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, குற்றவாளி தாமஸ் அற்புத ரகசியத்துக்கு, (இயற்கையாக மரணம் வரும் வரை) ஆயுள் தண்டனை, ரூ.15,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டு வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய சூரங்குடி காவல் ஆய்வாளா் வெங்கடேஷ் பெருமாள், அரசு வழக்குரைஞா் முத்துலெட்சுமி, முதல் நிலை காவலா் மணிலெட்சுமி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டினாா். நிகழாண்டு இதுவரை மொத்தம் 26 போக்ஸோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT