தூத்துக்குடி

விவசாயிகளுக்கு மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடி போட்டி

Syndication

மாநில அளவில் நடைபெற உள்ள திருந்திய நெல் சாகுபடி போட்டியில், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் பங்கேற்கலாம் என வேளாண்மை இணை இயக்குநா் இரா.பெரியசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருந்திய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, மாநில பயிா் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு, முதலிடம் வரும் விவசாயிக்கு அரசு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, ரூ.7,000 மதிப்புள்ள தங்கப் பதக்கம் வழங்குகிறது.

இப்போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள் குறைந்தது 2 ஏக்கா் பரப்பளவில் தொடா்ச்சியாக 3 ஆண்டு திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிா் ரகங்களை மட்டுமே பயிா் செய்திருக்க வேண்டும். நில உரிமையாளா், குத்தகைதாரா் பங்கேற்கலாம்.

இதில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் ரூ.150 பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும். பயிா் அறுவடை தேதியை 15 நாள்களுக்கு முன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநரிடம் தெரிவிக்க வேண்டும்.

இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அணுகி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT