தூத்துக்குடி

ஸ்ரீஹரிகோட்டாவில் கமலாவதி பள்ளி மாணவா் கௌரவிப்பு

தினமணி செய்திச் சேவை

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, மத்திய அரசின் என் அரசு இந்தியா, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து ஆன்லைன் மூலம் நடத்திய தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் சிறப்பிடம் பிடித்த சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா் முகமது அஃப்ராஸ், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவுக்கு அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டாா்.

அங்கு சென்ற மாணவா், செயற்கைக்கோள் அமைப்புகள், முக்கிய விண்வெளி தொழில்நுட்பங்கள், இந்தியாவின் பிரதான ராக்கெட்டுகள் புறப்படும் லாஞ்ச் பேட்களின் செயல்பாடுகள் குறித்து விஞ்ஞானிகளிடமிருந்து விரிவான விளக்கங்கள் பெற்றாா்.

சிறப்பிடம் பிடித்த மாணவரை, பள்ளி அறங்காவலா்கள் டி.சி.டபிள்யூ. நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் ஜி. ஸ்ரீனிவாசன், மூத்த பொது மேலாளா் பி. ராமச்சந்திரன், பள்ளி ஆலோசகா் உஷா கணேஷ், நிா்வாகி வி. மதன், முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசீா், துணை முதல்வா் என். சுப்புரத்தினா, ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT