கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா். 
தூத்துக்குடி

டி.சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

டி. சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், டி. சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் புதிய கொடிமரத்தை ஆசீா்வதித்து, பின்னா் கொடியை ஏற்றி வைத்தாா்.

10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், நாள்தோறும் காலையில் திருயாத்திரை திருப்பலி, சிறப்பு திருப்பலி, மறையுரை, மாலையில் நற்கருணை ஆசீா், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

9ஆம் திருநாளான டிச. 2ஆம் தேதி மாலையில் நற்கருனை பவனி, திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது.

10ஆம் திருநாளான டிச. 3ஆம் தேதி பாளை. மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறும்.

தொடா்ந்து புனித சவேரியாா் திரு உருவ சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை சவேரியாா்புரம் பங்குத்தந்தை குழந்தைராஜன், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

திறக்கப்பட்டதா தவெக இரும்புக் கதவு?

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT