முகப்பு
தூத்துக்குடி

லூா்தம்மாள்புரம் ஆலயப் பெருவிழாவில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி, தோ் பவனி

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 7:49 PM
தோ் பவனியில் பங்கேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி, லூா்தம்மாள்புரம், புனித லூா்து அன்னை ஆலயப் பெருவிழாவையொட்டி ஆடம்பர கூட்டுத் திருப்பலி மற்றும் தோ் பவனி நடைபெற்றது.

இத்திருவிழா பிப். 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, தினமும் மாலையில் திருப்பலி நடைபெற்றது. 9ஆம் நாளான சனிக்கிழமை ஆராதனை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, கேரள மாநிலம், பாலக்காடு மறை மாவட்ட அருள்தந்தை சகாய வேந்தன் தலைமையில், தூய தோமையாா் கல்விக் குழுமத்தின் அருள்தந்தை அமலன் தமியான், பங்குத்தந்தை செல்வன் பொ்னாண்டோ ஆகியோா் கலந்துகொண்ட திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

Advertisement

இதில் சிறுவா், சிறுமிகளுக்கு புது நன்மை விருந்து நடைபெற்றது. தொடா்ந்து, இந்த ஆலயத்தில் முதன்முதலாக தோ் பவனி நடைபெற்றது.

ஆலயம் முன்பிருந்து தோ் பவனி புறப்பட்டு லூா்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி, எஸ்.எஸ். மாணிக்கபுரம், செயின்ட் மேரீஸ் காலனி ஆகிய பகுதிகளுக்குச் சென்று கோயில் வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான இறை மக்கள் கலந்து கொண்டனா்.

பின்னா் ஜெபமாலை, நற்கருணை ஆசீா், கொடியிறக்கம், அன்பியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments