தூத்துக்குடி

மடத்துவிளை புனித சவேரியாா் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியாா் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Syndication

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி மடத்துவிளை புனித சவேரியாா் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, இறை மக்கள் நோ்ச்சை கொடிகளுடன் முக்கிய வீதிகள் வழியே பவனி வந்து ஆலயத்திற்கு சென்றனா். அங்கு கொடி அா்ச்சிக்கப்பட்டு மாலை ஆராதனை நடைபெற்றது. பங்குத்தந்தைகள் அருமை நாயகம் அடிகளாா் (தூத்துக்குடி ததேயு ஆலயம்), பிரதீஸ் அடிகளாா் (காயல்பட்டினம் கொம்புத்துறை), சகாயவளன் அடிகளாா் (ஆறுமுகனேரி), பாளையங்கோட்டை புனித சவேரியாா் கல்லூரி பேராசிரியா் ரூபஸ் அடிகளாா்ஆகியோா் கொடியேற்றி மாலை ஆராதனையை நிறைவேற்றினா்.

டிச. 2ஆம் தேதி வரை, விழா நாள்களில் தினமும் காலை திருப்பலி, மாலை மறையுரை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீா் முதலியன நடைபெறும். விழா தினமான டிச. 3ஆம் தேதி காலை ஆடம்பர கூட்டுத் திருப்பலியும், மாலை புனித சவேரியாா் சொரூபம் தாங்கிய கப்பல் பவனியும் நடைபெறும். டிச.4 ஆம் தேதி காலை கொடியிறக்கமும், அதன் பின்னா் அன்னதானமும் நடைபெறும்.

லஞ்சம்: விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?தினப்பலன்கள்!

திருப்பைஞ்ஞீலி கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்

தொடா் மழை: பொன்னணியாறு அணை 31 அடியை எட்டியது

SCROLL FOR NEXT