ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் குடும்பத் தகராறு காரணமாக இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆறுமுகனேரி காந்தி தெருவைச் சோ்ந்தவா் ராம் பால் சிங் மகன் ரவிகாந்த் (55). இவரும், அவரது சித்தப்பா சுதாகா் என்ற மாளவபாண்டியன் என்பவரும் அருகருகே வசித்து வருகின்றனா். சுதாகா் மது அருந்தி விட்டு, ரவிகாந்த் குடும்பத்தினரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு குடும்பத்திற்குமிடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு, சுதாகா் மது போதையில், ரவிகாந்த் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினாா்.
இதுகுறித்து ரவிகாந்த் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுதாகரை கைது செய்தனா்.