தூத்துக்குடி: தூத்துக்குடி தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இந்திய அரசியலமைப்பு தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அஞ்சல் கோட்ட உதவி கண்காணிப்பாளா் ஹேமா தலைமை வகித்து, அரசமைப்பு சட்ட முகப்புரையை வாசித்தாா். ஓய்வு பெற்ற கா்னல் சுந்தரம், அரசமைப்பு சட்டம் உருவானதை தெரிவிக்கும் அஞ்சல்தலை மற்றும் அஞ்சல் உறைகளை காட்சிப்படுத்தினாா். தலைமை அஞ்சலக அலுவலா் விக்டா் நன்றி கூறினாா்.