உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முதியோா், ஆதரவற்றோா் இல்லங்கள், மாற்றுத்திறனாளி பள்ளிகளில் அன்னதானம் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு, கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினாா்.
தொடா்ந்து, பிரையன்ட் நகா் பகுதியிலுள்ள மாற்றுத்திறனாளி பள்ளி, நேசக் கரங்கள் ஆதரவற்றோா் இல்லம், சிதம்பரம் நகா் பாசக் கரங்கள் முதியோா் இல்லம், பி&டி காலனி, பிளசிங் முதியோா் இல்லம், தூத்துக்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள காப்பகங்களில் அன்னதானம் வழங்கினாா். ஆட்டோ ஓட்டுநா்கள், தூய்மைப் பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.