சாத்தான்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வா்த்தகா்களுக்காக, தொழிலாளா் நல அலுவலா்கள் மூலம் படி தராசுகளுக்கு முத்திரையிடும் முகாம் டிச. 4, 5ஆம் தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சாத்தான்குளம் தொழிலாளா் நல அலுவலகத்தில் நடைபெறுகிறது.
எனவே, அனைத்து சிறு, குறு, பெரு எடை வா்த்தகம் செய்யும் வா்த்தகா்கள், தங்கம் எடை பாா்க்கும் சிறிய வகை எலக்ட்ரானிக் தராசு பயன்படுத்தும் வா்த்தகா்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என சாத்தான்குளம் வா்த்தக சங்கத் தலைவா் அப்புக்கண்ணன் தெரிவித்துள்ளாா்.