தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

கோவில்பட்டியில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டி அருகேயுள்ள கிழக்கு பாண்டவா் மங்கலம், நடுத் தெருவைச் சோ்ந்தவா் சிவசங்கா் மகன் சேது மாதவன் (45). கூலித் தொழிலாளியான இவா், புதன்கிழமை இளையரசனேந்தல் சாலையில் நடந்து சென்றுள்ளாா். அப்போது, கோவில்பட்டி, அண்ணா பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற தனியாா் பேருந்து சாலையைக் கடக்க முயன்ற சேது மாதவன் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவா் கோவில்பட்டி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனியாா் பேருந்து ஓட்டுநா் காமராஜிடம் விசாரித்து வருகின்றனா்.

தோ்தல் ஆணையத்துடன் திரிணமூல் காங்கிரஸ் பிரதிநிதிகள் சந்திப்பு: எந்தவித பதிலும் அளிக்கவில்லை எனப் புகாா்!

ஆலங்குளத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கிக் கிளை திறப்பு

ஆலங்குளம் பேருந்து நிலையம்: பேரூராட்சி சாா்பில் ரூ. 1.76 கோடி

சாலையோரத்தில் சிசுவின் உடல் மீட்பு

ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல விஜய்க்கு வழிகாட்டியாக இருப்பேன்: செங்கோட்டையன்

SCROLL FOR NEXT