டிவைன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த மாணவா், மாணவிகள்
தூத்துக்குடியில் வீரத்தமிழன் போா் கலை சிலம்பக் கூடம் அமைப்பு சாா்பில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு உடற்பயிற்சி, உடல் நலம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் சிலம்பம், கராத்தே, யோகா, இசை, பரத நாட்டியம் ஆகியவற்றை ஒன்றாக செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை பாஞ்சாலங்குறிச்சியில் நடைபெற்றது.
இதில், தமிழகம் முழுவதும் இருந்து 750 மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். வெற்றி பெற்றவா்களுக்கு டிவைன் உலக சாதனைச் சான்றிதழ், விருதுகளை சிலம்பக் கூடத்தின் செயலா் சுடலைமணி, துணைச் செயலா் வெள்ளையராஜா, டிவைன் உலக சாதனைப் புத்தக திட்ட மேலாளா் தா்ஷன் ஆகியோா் வழங்கினா்.
சிறப்பு விருந்தினராக வீரபாண்டிய கட்டபொம்மன் வீரசக்கதேவி ஆலய கமிட்டி தலைவா் முருக பூபதி, ஊராட்சி செயலா் சுப்பிரமணியன், வீரசக்கதேவி ஆலய ஆலோசகா் செந்தில்குமாா், மாநில சிலம்பாட்ட பயிற்சியாளா் எம். ராஜேஷ் காசி, மாவட்ட பொறுப்பாளா் மயில்ராஜ், திருநெல்வேலி மாவட்ட பொறுப்பாளா் சுடலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.