முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம்: போதைப்பொருள் விழிப்புணர்வு உலக சாதனை நிகழ்ச்சி

தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

Updated On : 2 மார்ச் 2026, 1:16 pm IST
தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை.
பகிர்:

சிதம்பரம் வட்டம் தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வாக தீச்சுடருடன் சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தெற்கு பிச்சாவரம் கடலோர கிராமத்தில் தாண்டவராயன் சோழன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கின்னஸ் சாதனையாளர் கார்த்திகேயன் (54) தொடர்ந்து 109 திருக்குறளை 12 நிமிடத்தில் சொல்லிக்கொண்டு பலவித தீப்பந்த சிலம்பம் விளையாடி உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தினார்.

அந்த சாதனையை ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கு பரிசு மற்றும் சான்றிதழும் வழங்கி கெளரவித்தனர்.

Advertisement

Advertisement

இவர் ஏற்கெனவே பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்ச்சியில் சிலம்ப ஆசான்கள் காளி, மகேஸ்வரன், தமிழச்சி மற்றும் பிச்சாவரம் கலியபெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments