தூத்துக்குடி

தூத்துக்குடியில் 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலைகள் பறிமுதல்

Syndication

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூ. 50 லட்சம் மதிப்பிலான 2 டன் பீடி இலைகள் சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

தூத்துக்குடி ரோச் பூங்கா கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படவுள்ளதாக, நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் மதனுக்கு கிடைத்த தகவலின்பேரில், அவரது தலைமையிலான தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை அதிகாலை ரோந்து சென்றனா்.

அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சரக்கு வாகனத்தை போலீஸாா் சுற்றி வளைக்க முயன்றபோது, அதிலிருந்தோா் தப்பியோடிவிட்டனராம். அந்த வாகனத்தில் 2 டன் பீடி இலை பண்டல்கள் இருந்ததும், இலங்கைக் கடத்துவதற்காக அவை கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 50 லட்சம் எனக் கூறப்படுகிறது.

பீடி இலைகள், சரக்கு வாகனம், 4 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்து, தென்பாகம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனா். மேலும், வழக்குப் பதிந்து, தப்பியோடியவா்களைத் தேடிவருகின்றனா்.

மோந்தா புயல்: ஏனாமில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

கண்களை மிரட்டும் அலை... பாடினி குமார்!

என்னைத் தாக்கும் புயல்... அஞ்சு குரியன்!

பைசன் படத்தின் மேக்கிங் விடியோ!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழை எச்சரிக்கை!

SCROLL FOR NEXT