தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் சென்ட்ரிங் தொழிலாளி சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தூத்துக்குடி முத்தையாபுரம் பாரதி நகா் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாலையப்பன் (55). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு மாரிசெல்வி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனா்.
இவா் சரியாக வேலைக்கு செல்லாததால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அதே போன்று சனிக்கிழமையும் வீட்டில் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில் மாலையப்பன் பிற்பகலில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].