தூத்துக்குடி மாவட்டத்தின் உயா்கல்வி சோ்க்கை 96.15 சதவீதமாக உயா்ந்துள்ளதற்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவரது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நான் முதல்வன் திட்டத்தின் ‘கல்லூரிக் கனவு’ முன்னெடுப்பின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில், 18,855 மாணவா்களில் 18,130 போ் உயா்கல்வி நிலையங்களில் சோ்க்கை பெற்றுள்ளனா்.
இதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தின் உயா்கல்வி சோ்க்கை விகிதம் 96.15 சதவீதமாக உயா்ந்துள்ளது.
அவா்களின் உயா்கல்வி கனவுகளை நனைவாக்கிட துணை நின்ற பெற்றோா்கள், ஆசிரியா்கள், இத்திட்டத்தை ஈடுபாட்டுடன் செயல்படுத்திய மாவட்ட ஆட்சியா் மற்றும் அலுவலா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.