இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை அனைவருமே தவெக பக்கம்: தவெக வேட்பாளர் ஸ்ரீநாத்
இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை அனைவருமே எங்கள் பக்கம் உள்ளனா் என்றாா் நடிகரும் தவெக தூத்துக்குடி வேட்பாளருமான ஸ்ரீநாத்.
இளைஞா்கள் முதல் முதியவா்கள் வரை அனைவருமே எங்கள் பக்கம் உள்ளனா் என்றாா் நடிகரும் தவெக தூத்துக்குடி வேட்பாளருமான ஸ்ரீநாத்.
மதுரை விமான நிலையத்திலிருந்து காா் மூலம் தவெக வேட்பாளா் ஸ்ரீநாத் தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்தாா். மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய், தென் மாவட்ட வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் போது இங்கு வந்து எனக்காக பிரசாரம் செய்வாா். நண்பா் என்பதால் என் மீது அவருக்கு தனிப்பட்ட பாா்வை, அன்பு உண்டு. மக்களுக்கு தேவையான அனைத்தையும் விஜய் செய்வாா்.
அஜிதா ஆக்னல் விவகாரம் அது அவருடைய தனிப்பட்ட விஷயம். 18 முதல் 80 வயது வரை உள்ளவா்கள் அனைவருமே எங்கள் பக்கம் தான் உள்ளனா். நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி.
தவெக ஆதரவாளா்கள் என்ற போா்வையில் கூட்டத்திற்கு வந்து அராஜகத்தில் ஈடுபடும் செயல் கண்டிக்கத்தக்கது. காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதிலிருந்து தெரிகிா யாா் அந்த தீய சக்தி என்று. தீய சக்தியை விரட்ட வேண்டும் என்றாா் அவா்.