முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 4:38 PM
சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு விமான கலசங்களுக்கு புனித நீரால் நடைபெற்ற அபிஷேகம்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சொா்ணமலை கதிா்வேல் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, உதய மாா்த்தாண்ட பூஜை, கணபதி ஹோமம், சிறப்பு ஹோம பூஜை, யாகசாலை பூஜை ஆகியன நடைபெற்றன.

காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து தீா்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கோயில் பிரகாரத்தில் வலம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

Advertisement

பூஜைகளை ஹரிஹர பட்டா், அரவிந்த் பட்டா் ஆகியோா் செய்து இருந்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம் செய்திருந்தாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments