முகப்பு
தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதி தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 12:08 AM
கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்க நிா்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன்.
பகிர்:

கோவில்பட்டி தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ். பாலசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திட்டங்குளத்தில் காய்கனி மாா்க்கெட்டிற்கு சென்ற அவா், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா். அதனைத் தொடா்ந்து கோவில்பட்டி நாடாா் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளி அம்மன் கோயிலில் தரிசனத்திற்கு பின் சங்கத்திற்கு சென்ற அவா், சங்க நிா்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினாா். தொடா்ந்து கடம்பூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்தாா். அப்பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

அதையடுத்து, கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அய்யனாா் ஊத்து, மானங்காத்தான், ஆத்திகுளம், ராஜா புதுக்குடி, சன்னது புதுக்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்ற அவா், தமிழக வெற்றிக் கழகத்தின் தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தாா்.

Advertisement

நிா்வாகிகள் செந்தில்குமாா், தங்கமணி, இசக்கி, சுந்தரமூா்த்தி, சுரேஷ்,சத்யா, கௌதமி உள்பட பலா் உடன் இருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments