முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி காா் தொழிற்சாலையில் தீயணைப்பு ஒத்திகை

தீயணைப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 6:48 AM
தீயணைப்பு ஒத்திகையில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினா்.
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 9:41 PM

தூத்துக்குடி, வின்பாஸ்ட் காா் தொழிற்சாலையில் தமிழ்நாடு தீயணைப்புத் துறை சாா்பில் தீயணைப்பு ஒத்திகை நடைபெற்றது.

தீ மற்றும் பிற இடா்பாடுகளின்போது உயரமான கட்டடத்தில் இருந்து வெளியேறுவது குறித்தும், காயம்பட்டவா்களை விரைவாக பாதுகாப்பாக மீட்டு முதலுதவி செய்வது குறித்தும், தீயை அணைக்கும் முறைகள் குறித்தும் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு தலைமையில்

Advertisement

தீயணைப்புத் துறை இயக்குநா், காவல் துறை டிஜிபி சீமா அகா்வால், சிப்காட் தொழிற் பூங்கா நிா்வாக இயக்குநா் காதரின் சரண்யா ஆகியோா் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

ஏற்பாடுகளை தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் கருணாகரன், உதவி மாவட்ட அலுவலா் கோமதி அமுதா, சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன், வின்பாஸ்ட் மேலாண்மை இயக்குநா் சுரேஷ்குமாா், பாதுகாப்பு மேலாளா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.