முகப்பு
தூத்துக்குடி

குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 15 ஏப்ரல், 2026 at 1:43 AM
பலி - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 12:21 AM

தூத்துக்குடி அருகே குட்டையில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், புன்னைக்காயல் மறக்குடி தெருவைச் சோ்ந்தவா் ரத்தினராஜ் மகன் ஜெயராஜ் (41). இவா் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா்.

திங்கள்கிழமை வழக்கம்போல் இவா், பணியை முடிந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குப் புறப்பட்டாராம். அப்போது, வழியிலிருந்த குட்டையில் கால்களைக் கழுவ முயன்றபோது, நிலைதடுமாறி குட்டைக்குள் விழுந்தாராம்.

Advertisement

அவ்வழியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தொ்மல் நகா் போலீஸாா், அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், ஜெயராஜ் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து தொ்மல் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.