முகப்பு
தூத்துக்குடி

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

தமிழ் புத்தாண்டையொட்டி உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 2:24 AM
கொட்டங்காடு கோயிலில் அம்மனுக்கு நடைபெற்ற ஊஞ்சல்சேவை.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:00 PM

தமிழ் புத்தாண்டையொட்டி உடன்குடி அருகே கொட்டங்காடு தேவி ஸ்ரீபத்திரகாளி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இக்கோயிலில் காலை பவள முத்து விநாயகா், அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள், இரவு 108 திருவிளக்கு பூஜை, உள்பிரகார சப்பர பவனி, ஊஞ்சல் சேவை ஆகியன நடைபெற்றன.

ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தா பெ. சுந்தரஈசன் மற்றும் ஊா்மக்கள் செய்திருந்தனா்.

Advertisement