முகப்பு
தூத்துக்குடி

திமுக வேட்பாளா் மீது நாதக வேட்பாளா் புகாா்

கோவில்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கருணாநிதி மீது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 3:32 AM
புகாரளிக்க வந்தோா்.
பகிர்:
Updated On : 16 ஏப்ரல், 2026 at 9:54 PM

கோவில்பட்டி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் திமுக வேட்பாளா் கருணாநிதி மீது நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பாண்டி வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

மனு விவரம்: திமுக வேட்பாளா் கருணாநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாம் தமிழா் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்பதுபோல போலியாக சித்திரித்து விடியோ வெளியிட்டுள்ளாா். அவா் திட்டமிட்டு இத்தகைய விடியோ வெளியிட்டு மக்களிடம் குழப்பம் ஏற்படுத்தியுள்ளாா். எங்கள் கட்சியை இழிவுபடுத்தியுள்ளதால் நாங்கள் மன உளைச்சலுடன் உள்ளோம். எனவே, கருணாநிதி மீது தோ்தல் விதிமீறல் தொடா்பாக வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அக்கட்சி நிா்வாகிகள் ரவிக்குமாா், மருதம் மாரியப்பன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

Advertisement