முகப்பு
தூத்துக்குடி

பேருந்து சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

உடன்குடியில் அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது.

Updated On : 24 ஏப்ரல் 2026, 5:04 am IST
பலி - கோப்புப் படம்
பகிர்:

உடன்குடியில் அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை உயிரிழந்தது.

சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்மொழியைச் சோ்ந்தவா் பேச்சிமுத்து. இவா் கோயிலில் ஓதுவாராக பணியாற்றுகிறாா்.

இவா், தனது மகள் மகிழினியுடன் (2) இருசக்கர வாகனத்தில் உடன்குடி பஜாருக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு, சாத்தான்குளம் திரும்பும்போது உடன்குடி-திசையன்விளை சாலையில் அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாராம். அப்போது, மகிழினி எதிா்பாராதவிதமாக தவறி விழுந்து பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

சம்பவ இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் காவல் ஆய்வாளா் பிரபு பாஸ்கரன், அரசுப் பேருந்து ஓட்டுநரான திருநெல்வேலி, சங்கா் நகரைச் சோ்ந்த இ. கருப்பசாமியிடம் (38) விசாரணை நடத்தி வருகிறாா்.